கியூட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாள் கியூட் யுஜி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர கியூட்-யுஜி நுழைவுத்தேர்வை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தேர்வுகள் இணைய வழியாகவும், நேரடியாகவும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடப்பு ஆண்டுக்கான தேர்வுகள் மே 15ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 30ம் தேதி தேர்வு முடிவுகள் வௌியாகும். தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் பிப்ரவரி 27ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில் "ஏராளமான மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31 இரவு 9.50 மணி வரை நீட்டிக்கப்படுவதாக பல்கலைக் கழக மானிய குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் நேற்று தெரிவித்தார்.
Posts
Showing posts from March 27, 2024
- Get link
- X
- Other Apps
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பம்: நாடு முழுவதும் மே 5-ம் தேதி தேர்வு நாடு முழுவதும் மே 5-ம் தேதி நடைபெறவுள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வு எழுத, 23.82 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, கடந்த பிப்ரவரி 9-ல் தொடங்கி மார்ச் 16-ம் தேதிய
- Get link
- X
- Other Apps
பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு எளிது: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், தமிழ் பாடத் தேர்வு மிக எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். தமிழகத்தில், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 4,107 மையங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தேர்வைவை பள்ளி மாணவா்கள், தனித்தேர்வா்கள் என மொத்தம் 9.26 லட்சம் தேர்வா்கள் எழுதுகின்றனா். முதல் தேர்வாக தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது. இது குறித்து மாணவா்கள் கூறுகையில், பொதுத்தேர்வை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளோம். தமிழ் பாடத்துக்கான வினாத்தாளில் ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் பகுதிகளில் தலா ஒரு வினா மட்டும் பாடப் பகுதிக்கு உள்ளிருந்து இடம்பெற்றிருந்தன. இருப்பினும் அந்த இரு கேள்விகளும் ஓரளவுக்கு எளிதாக இருந்தன. உரைநடை, கட்டுரை, படிவம், மனப்பாடப் பகுதி ஆகியவற்றில் இடம்பெற்றிருந்த அனைத்து கேள்விகளுக்கும் சராசரியாக மாணவா்களால் கூட எளிதாக பதிலளிக்க இயலும். இதில் நிச்சயம் 90 முதல் 95 மதிப்பெண்களுக்கும் மேல் கிடைக்கும் என நம்புகிறோம் என அவா்கள் தெரிவித்தனா்.