10 ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வில் தவறான கேள்வி: உரிய மதிப்பெண் வழங்கக் கோரிக்கை! தமிழகத்தில் இன்று (மார்ச் 26) நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்பாட வினாத்தாளில் தவறான கேள்வி கேட்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு உரிய மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் ஆசிரியை சுகிர்தராணி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வினை மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் என 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்விற்காக மாநிலம் முழுவதும் 4,017 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று முதல் தேர்வாக, தமிழ் நடைபெற்றது. இந்த தேர்விற்காக கொடுக்கப்பட்ட வினாத்தாளில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு உரிய மதிப்பெண் கொடுக்கவும் ஆசிரியை சுகிர்தராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆசிரியையும் சமூக செயற்பாட்டாளருமான சுகிர்தராணி தனது சமூக தளப் பதிவில், "இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ்ப்பாட வினாத்தாளின் 33வது வினாவில் 'நெடுநாளாகப் பார்க்க
Posts
Showing posts from March 26, 2024
- Get link
- X
- Other Apps
ஹைகோர்டில் கிளர்க் உள்பட 74 பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு, டைப்பிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராபர், ஜூனியர் கிரேட் ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 74 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம். சென்னை உயர் நீதிமன்றங்களின் நிர்வாக கட்டுப்பாட்டில் வரும் நீதிமன்றங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பு பிரிவு இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்டவை அடிப்படையில் தகுதியான பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது 74 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள் விவரம்: 1. சீனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் (குரூப்-பி பதவி) - 06 2. ஜூனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் (குரூப்-சி பதவி) - 09 3. மொழிபெயர்ப்பாளர் / மொழிபெயர்ப்பாளர் (குரூப்-சி பதவி) - 02 4. ஜூனியர் கிளார்க் (குரூப்-சி பதவி) - 23 5. தட்டச்சர் (குரூப்-சி பதவி