Posts

Showing posts from March 18, 2024
Image
  ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில ஆலோசனை கூட்டம் 2010 ஆம் ஆண்டு  முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள காலி பணியிடம், NCTE clasue V, சென்னை நீதிமன்றம் உத்தரவு, கலைஞர் அறிக்கை பின்பற்றி முதல்வர் அவர்கள் கொள்கை முடிவு எடுத்து கலைஞர் நூற்றாண்டு விழாவில் எங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில  ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.
Image
  ஏப்.,13க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம் லோக்சபா தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்.,15ல் துவங்கியது. ஏப்., 2ல் முடிகிறது. 10ம் வகுப்பு தேர்வு பிப்., 15ல் துவங்கி, இந்த மாதம், 13ம் தேதி நிறைவு பெற்றது. ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2வுக்கு பிப்., 12ல் பொதுத்தேர்வு துவங்கியது; ஏப்., 2ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, பிப்., 21ல் தேர்வு துவங்கியது; இந்த மாதம், 28ல் முடிகிறது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 1ம் தேதி துவங்கியது. வரும், 22ம் தேதி தேர்வு முடிகிறது. பிளஸ் 1 பொதுதேர்வு மார்ச், 4ல் துவங்கியது. வரும், 25ம் தேதி முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 26ம் தேதி துவங்க உள்ளது; ஏப்., 8ல் முடிகிறது.இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்., 19ல் ஒரே கட்டமாக, 40 தொகுதிகளுக்கும் ஓட்...