நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 1,377 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.!!! நாடு முழுவதும் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 1,377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நவோதயா வித்யாலயா சமிதி வெளியிட்டுள்ளது. பெண் பணியாளர் செவிலியர் 121, மெஸ் ஹெல்பர் 442, இளநிலை செயலக உதவியாளர் 381, லேப் அட்டெண்டன்ட் 161 உள்ளிட்ட இதர பணிகளுக்கு 10 முதல் முதுகலை வரையிலான தகுதிகள் உள்ளன. மேலும் விண்ணப்பம் மற்றும் தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posts
Showing posts from March 17, 2024
- Get link
- X
- Other Apps
NEET, JEE Exams: நீட், ஜே.இ.இ தேர்வு தேதிகளில் மாற்றமா? என்.டி.ஏ விளக்கம் மக்களவைத் தேர்தல்கள் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி முடிவடையும் நிலையில், JEE முதன்மை 2024 அமர்வு 2 தேர்வு மற்றும் நீட் (NEET UG 2024) தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட காலண்டரின்படி, கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) முதன்மை 2024 அமர்வு 2 ஏப்ரல் 4 முதல் 15 வரை நடத்தப்படும். அதேநேரம் JEE முதன்மை தேர்வுகள் ஏப்ரல் 1 மற்றும் 15 க்கு இடையில் நடைபெறத் திட்டமிடப்பட்டது, ஆனால் அறியப்படாத காரணங்களால் தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டது. இதேபோல், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) மே 5 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது, அதற்கான விண்ணப்ப திருத்தம் மார்ச் 18 ஆம் தேதி தொடங்கும். "JEE முதன்மை அமர்வு 2 மற்றும் NEET தேர்வுகள் அட்டவணைப்படி இருக்கும் என்று indianexpress.com க்கு தேசிய தேர்வு முகமை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், CUET தேர்வு அட்டவணை விண்ணப்பப் பதிவு முடிந்ததும் மதிப்பாய்வு செய்யப்படும், மேலும் அட்டவணையின்படி தேர்வை நட...
- Get link
- X
- Other Apps
SSC: மத்திய அரசு வேலை வாய்ப்பு; 2049 பணியிடங்கள்; 10, 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் தேர்வாணையம் 12 ஆம் கட்ட தேர்தெடுக்கப்பட்ட பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,049 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2024 மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 2049 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பதவிகள் Lab Attendant, Binder, Sanitary Inspector, Senior Projectionist, Field cum Laboratory Attendant, Nursing Orderly, Driver cum Mechanic, Workshop Attendant, Boiler Attendant, Technical Operator, Photographer, Field cum Lab Attendant, Photo Artist, Canteen Attendant, Compositor, Field Attendant, MTS, Library Clerk, Staff car Driver, Medical Attendant, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்...
- Get link
- X
- Other Apps
TNPSC Group 4 பயிற்சித் தொடர்: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 1! TNPSC Group 4: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக, குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ.வுக்கு, பலர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் புவியியல் பகுதியில் சராசரியாக 8 மதிப்பெண்கள் வரை கேட்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, புவியியல் பகுதி என்பது மிகவும் எளிமையான பகுதி என்பதால் அதில் இருந்து இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4க்காக தெரிந்துகொள்ளவேண்டிய பகுதிகளை சிறு சிறு குறிப்புகளாகப் பார்ப்போம். சூரியக் குடும்பம்(Solar System): சூரியக் குடும்பம் என்பது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். நாம் ஆங்கிலத்தில் சொல்லும் சோலார் சிஸ்டம் என்ற சொல்லானது, ''Sol''என்ற லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது. சோலார் என்ற சொல்லானது ''சூரியக்கடவுள்'' என்னும் அர்த்தத்தைத் சுட்டிக் காட்டுகிறது. பெருவெடிப்பு(Big Bang): பெருவெடிப்பு என்பது ஒரு வெடிப்பு நிகழ்ந்ததன்மூலம், வானில் கணக்கற்ற நட்சத்திரங்களும், சிறு சிறுகோள்களும் உர...
- Get link
- X
- Other Apps
கல்வியைக் காவிமயமாக்க முதல்வர் ஸ்டாலின் எப்படி துணைபோகிறார்? இதுதான் பாசிச எதிர்ப்பா? சீமான் ஆவேசம்! பாஜக அரசின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் துணைபோவது அப்பட்டமான ஆரிய அடிமைத்தனமில்லையா? என திமுக அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். .இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றி 'பிஎம் ஸ்ரீ பள்ளிகளை' தமிழகத்தில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழகத்தில் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், தற்போது மெல்ல மெல்ல பாஜகவின் புதிய கல்விக் கொள்கையை நுழைப்பது தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் கொடுஞ்செயலாகும். புதிய கல்விக் கொள்கையின் அனைத்து கூறுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த மோடி அரசால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளி திட்டம்தான் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாகும். அதனை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த விருப்பம் தெரிவித...
- Get link
- X
- Other Apps
ஜூன் 3-ல் ஸ்லெட் தகுதித் தேர்வு அறிவிப்பு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உதவும் 'ஸ்லெட்' தகுதித் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடத்தப்படும் என நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.msuniv.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவிலான நெட் தேர்வை யுஜிசியாலும், மாநில அளவிலான ஸ்லெட் தேர்வு குறிப்பிட்ட ஒரு பல்கலைக்கழகத்தாலும் நடத்தப்படும். அந்த வகையில் 2024 முதல் 3 ஆண்டுகளுக்கு ஸ்லெட் தேர்வு நடத்தப்படும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்லெட் தேர்வுக்கான தொடக்கநிலை அறிவிப்பை சுந்தரனார் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஸ்லெட் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடத்தப்பட உள்ளது. மொத்தம் 43 பாடங்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வுக்கான ஆன்ல...