Posts

Showing posts from March 15, 2024
Image
  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 20-ம் தேதி முதல் ஹால் டிக்கெட்.!  10-ம் வகுப்பு மாணவர்கள் மார்ச் 20-ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ; 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 15-ம் தேதியும், தேர்வு மைய படிவங்களை 16-ம் தேதியும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஹால் டிக்கெட்டை மார்ச் 20-ம் தேதி காலை முதலும், தேர்வு மைய படிவங்களை அதே நாளில் பிற்பகல் முதலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதே போல 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய பள்ளிகளுக்கு மார்ச் 18-ம் தேதி வரை அரசு தேர்வுத் துறை அவகாசம் அளித்துள்ளது.  அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வுத் துறை இணையதளத்துக்கு சென்று, தங்கள் பள்ளிக்கான பயன்பாட்டாளர் எண், கடவுச்சொல்லை பயன்படுத்தி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள
Image
  புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்: ஏப்.1 பள்ளிகள் திறப்பு புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் அடுத்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாவதால், மார்ச் 25-ல் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி அடுத்த கல்வியாண்டு புதுச்சேரி, காரைக்காலில் தொடங்குகிறது. புதுச்சேரியில் மொத்தம் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. புதுவைக்கு தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. 2011-ல் என்.ஆர்.காங்., அரசு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. 2014 - 15ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ., பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சிபிஎஸ்இ., பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. அது காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்து. இவ்வாறு கடந்த 2018 - 19 கல்வி ஆண்டில் 5ம் வகுப்புக்கும் சிபிஎஸ்இ., பாடத் திட
Image
  தமிழக அரசு வெளியிட்ட 2299 கிராம உதவியாளர் வேலைகள்..! மாவட்ட வாரியாக காலி பணியிடங்கள் வெளியீடு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கு ஒரு கிராம உதவியாளர் நியமிக்கப்படுகிறார். கிராம நிர்வாக அலுவலரின் கீழ் கிராம உதவியாளர் செயல்பட வேண்டும். அடிப்படைக் கல்வியை மட்டுமே தகுதியாகக் கொண்ட இப்பணிக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணிகளுக்கான பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. நிறுவனம்: தமிழ்நாடு வருவாய்த் துறை பணி: கிராம உதவியாளர் மொத்த காலியிடங்கள்: 2299மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: அரியலூர் - 21, சென்னை 20,  செங்கல்பட்டு-41,  கோயம்புத்தூர்-61,  கடலூர் - 66,  திண்டுக்கல் - 29,  தருமபுரி - 39,  ஈரோடு - 141,  காஞ்சிபுரம் - 109,  கரூர் - 27,  கிருஷ்ணகிரி -33,  மதுரை - 155,  மயிலாடுதுறை - 13,  நாகப்பட்டினம் - 68,  நாமக்கல் - 68, பெரம்பலூர் - 21,  புதுக்கோட்டை - 27,  ராமநாதபுரம் - 29,  ராணிபேட்டை 43,  சேலம்