Posts

Showing posts from March 14, 2024
Image
  வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை தற்போது வரை எவ்வளவு? தமிழக அரசு தகவல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.81 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த பிப்.29-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- தமிழ்நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 54,81,564 ஆகும். அதில், ஆண்கள் 25,26,487 பேரும், பெண்கள் 29,54,,792 பேரும் உள்ளனா். மூன்றாம் பாலினத்தவா் 285. இந்த எண்ணிக்கையில், வயது வாரியாக பதிவுதாரா்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்கள் 11,495 பேரும், 19 முதல் 30 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 24,12,771 பேரும், 31 முதல் 45 வயது வரையுள்ளவா்கள் 17,21,980 பேரும் உள்ளனா். 46 வயது முதல் 60 வயது வரையுள்ள முதிா்வு பெற்ற பதிவுதாரா்களின் எண்ணிக்கை 2,39,391 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வை மாணவா்கள் முடித்து தங்களது கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு
Image
  தமிழகம் முழுவதும் 2299 கிராம உதவியாளர் பணியிடங்கள். அரசு அறிவிப்பு தமிழகத்தில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம உதவியாளர் நியமனம் செய்யப்படுகிறார். கிராம நிர்வாக அலுவலரின் கீழ் கிராம உதவியாளர் செயல்பட வேண்டும். அடிப்படை கல்வியை மட்டுமே தகுதியாக கொண்ட இந்த பணிக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணிகளுக்கான பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக காலி பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி: 5ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை வயது வரம்பு: 21 முதல் 37க்குள் இருக்க வேண்டும் வேலைக்கு விண்ணப்பிக்க: www.tn.gov.in
Image
  NEET UG 2024: நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வேண்டுமா? தேதிகள் அறிவிப்பு தேசிய தேர்வு முகமை (NTA) நீட் தேர்வு (NEET UG 2024) விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேதிகளை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://exams.nta.ac.in/ என்ற பக்கத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம். இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. மார்ச் 9 ஆம் தேதி கடைசி தேதி என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்வதான தேதிகளை அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திருத்தம் சாளரம் மார்ச் 18 அன்று திறக்கப்படும் மற்றும் மார்ச் 20, 2024 அன்று இரவு 11.50 மணிக்கு மூடப்படும். இந்தக் காலக்கெடுவிற்குப் பிறகு, எந்தச் சூழ்நிலையிலும் மேலும் திருத்தங்கள் அனுமதிக்கப்படாது. திருத்தங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் கட்டணங்கள், கிரெடிட்/டெபிட் கார்டு, நெட
Image
  4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை நேர்மையாக நிரப்ப வேண்டும்.. ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அன்புமணி கோரிக்கை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. வரும் 28-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆகஸ்ட் 4-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. 4,000 பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,079 ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 11 ஆண்டுகளாக ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. அதனால் கல்வித்தரம் சீரழிந்து வரும் நிலையில், அதைத் தடுக்க புதிய உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. 4000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்ப
Image
  TRB: 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு.! 28-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.! தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  ஆங்கிலத் துறையில் 656, தமிழ் துறையில் 569 உள்பட 65 துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வரும் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற உள்ளது.