நீட் தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்: அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வுகள் முகமை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 16-ம் தேதி வரை தேசிய தேர்வுகள் முகமை நீட்டித்துள்ளது. 2024-25 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட13 மொழிகளில் மே 5-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்.9ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 9ஆம் தேதி (இன்று) இரவு 11.55 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் மார்ச் 16ஆம் தேதி இரவு 10.50 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும் இரவு 11.50 மணி வரை நீட் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் neet.nta.nic.in என்ற வலைதளம் வழியாக மார்ச் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வுக்கான கட்டணம் பொதுப் பிரிவுக்கு ரூ.1,700, எஸ்சி/ எஸ்டி பிரி...
Posts
Showing posts from March 10, 2024
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு...ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகிறார்கள். 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளார்கள். சரியாக புள்ளிவிவரத்துடன் சொல்வது என்றால், ஒரு இடத்துக்கு 326 பேர் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் அதிகப்படியான மக்கள் அரசு வேலைகளில் சேர உதவும் தேர்வு என்றால், சந்தேகமே வேண்டாம் அது குரூப் 4 தேர்வு தான். கடந்த முறை நடந்த தேர்வின் மூலம் சுமார் 10000 பேர் அரசு வேலையில் சேர்ந்தனர். இந்த முறை ஆறு ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். குரூப் 4 என்பது அரசு ஊழியர்கள் ஆக விரும்புவோருக்கான முக்கியமான தேர்வு ஆகும். இந்த குரூப் 4 தேர்வின் கீழ் கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் 2,604, தட்டச்சர் 1,705, சுருக்கெழுத்துதட்டச்சர் 445, தனி உதவியாளர், கிளர்க் 3, தனி செயலாளர் 4, இளநிலை நிர்வாகி 41, வரவேற்பாளர் 1, பால் பதிவாளர் 15, ஆய்வக உதவியாளர் 25, பில் கலெக்டர் 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர் 49, வன பாதுகாவலர், காவலர் 1,177, இளநிலை ஆய்வாளர் 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப...
- Get link
- X
- Other Apps
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு.. தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.!! மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET 2024) ஜூலை 2024க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு நாடு முழுவதும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். இந்த ஆண்டு தேர்வு, ஜூலை 7, 2024 அன்று நடைபெறும். இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் CBSE CTET அதிகாரப்பூர்வ இணையதளமான ctet.nic.in ஐ கிளிக் செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 7ஆம் தேதி முதல் பெறப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 2, 2024 என அறிவிக்கப்பட்டுள்ளது.