Posts

Showing posts from March 8, 2024
Image
  CTET-2024 தேர்வு அறிவிப்பு. ஏப்ரல் 2 வரை விண்ணப்பிக்கலாம்.!!! நாடு முழுவதும் சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 19ஆவது சீட் தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜூலை ஏழாம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 136 நகரங்களில் 20 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  அரசுப் பள்ளிகளில் இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சேர்க்கை அரசுப் பள்ளிகளில் மாா்ச் 1-ஆம் தேதி வரை இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை பெற்றுள்ளனா். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவா் சேர்க்கைப் பணிகள் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்டது.  கடந்த 1-ஆம் தேதி முதல் மாணவா் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 5 நாள்களில் மட்டும் அரசு பள்ளிகளில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை பெற்றுள்ளனா். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8,365 மாணவா் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுதவிர அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவா்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவும், 5 லட்சம் மாணவா் சேர்க்கையை இலக்காக கொண்டு செயல்படவும் ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Image
  பிளஸ் 1 ஆங்கிலம் பாடத் தேர்வு கடினம்: மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புபொதுத் தேர்வு கடந்த 4-ம் தேதிதொடங்கியது. நேற்று ஆங்கில பாடத் தேர்வு நடைபெற்றது. 3,302 மையங்களில் நடைபெற்றதேர்வில், 8.15 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். 9,093 பள்ளி மாணவர்கள், 533 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9,626 பேர் தேர்வெழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பிளஸ் 1 ஆங்கிலத் தேர்வு கடினமாக இருந்ததாகவும், அதிக அளவில் மறைமுக வினாக்கள் இடம் பெற்றதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘ஒரு மதிப்பெண் பகுதியில் 9, 10, 12, 15, 20 ஆகியவினாக்கள் பாடப் பகுதியின் ள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தன. அதற்கு பதில் அளிப்பது மாணவர்களுக்கு கடினமாக இருந்தது. அதேபோல, 2 மதிப்பெண் பகுதியில் 28 மற்றும் 30-வது கேள்விகள் (இலக்கண பகுதி) மறைமுக வினாக்களாக இருந்தன. சுமார் 8 முதல்10 வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் 3 மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் எளிதாகவே இருந்தன’’ என்றனர். பிளஸ் 1 வகுப்புக்கான இயற்பியல், கணினி தொழில்நுட்பம்,