
NEET UG 2024; நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி தேதி; இந்த ஆவணங்கள் முக்கியம்! NEET UG 2024:இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். தேசிய தேர்வு முகமை (NTA) பிப்ரவரி 9 ஆம் தேதி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) 2024 விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியது. இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான ஒரே தேர்வான நீட் தேர்வான, மே 5, 2024 அன்று நடைபெறும். தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 9 ஆகும். எனவே பதிவு செய்ய விரும்பும் இளங்கலை மருத்துவ ஆர்வலர்கள் புதிய NEET இணையதளம் https://exams.nta.ac.in/NEET/மூலம் NEET 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் இந்திய மருத்துவ படிப்புகளான ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவ படிப்புகளை படிக்க நீட் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். 12 ஆம் வகுப்பி...