Posts

Showing posts from March 5, 2024
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப் V-A தேர்வு; 15 மாதமாகியும் இறுதிப் பட்டியலை வெளியிடாதது ஏன்?- அன்புமணி கேள்வி தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு தேர்வு முடிந்து 15 மாதங்களாகியும் இறுதிப் பட்டியல் வெளியாகவில்லை என்றும் உடனே கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பா.ம.க.தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது: ''தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உதவியாளர்/ உதவி பிரிவு அலுவலர் பணிக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் V-A தேர்வு, கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் நாள் நடைபெற்றது. இந்த நிலையில், 15 மாதங்களாகியும் தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் இறுதிப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் தலைமைச் செயலக பணிக்கான தேர்வு எழுதிய தேர்வர்கள் கடுமையான மன உளைச்சல் அடைந்துள்ளனர். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலட்சியம்தான் காரணம் தலைமைச் செயலக உதவியாளர்/ உதவிப் பிரிவு அலுவலர் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றோரின் பட்டியல் வெளியிடப்படாததற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலட்சி...
Image
  4,187 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு. மார்ச் 28 வரை விண்ணப்பிக்கலாம்..!!! SSC வேலை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல் படை பணிகளில் 4187 சப் இன்ஸ்பெக்டர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கு ஆர்வம் உள்ளவர்கள் ssc.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 28ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  பிளஸ் 1 தமிழ் தேர்வு சற்று கடினம்; சென்டம் கஷ்டம் - மாணவர்கள் கருத்து தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழ் தாள் எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் 11 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் இன்று தமிழ் தாளுடன் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், தமிழ் தாள் எப்படி இருந்தது என்பதை தெரிந்துக் கொள்வோம். தமிழ் தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 2 மதிப்பெண் மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. ஆனால் ஒரு மதிப்பெண் மற்றும் நெடு வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. அதாவது 4 மதிப்பெண், 6 மதிப்பெண் மற்றும் 8 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தன. பாடத்திற்கு பின்புறம் உள்ள பயிற்சி வினாக்களைத் தாண்டி சில கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அவை ஒரு மதிப்பெண் வினாக்களில் கேட்கப்பட்டு இருந்தன. எனவே 100க்கு 100 மதிப்பெண்கள் எடுப்பது கடினம். இவ்வாறு மாணவர்கள் தெரிவிக்கின்றனர். நிபுணர்களும் மாணவர்கள் கருத்தையே வலியுறுத்துகின்றனர். 12 ஆம் வகுப்பை விட 11 ஆம் வகுப்ப...