தமிழ் கேள்வித்தாள் ஈஸி... ஆனால் இந்த பிரச்னை : +2 தேர்வு குறித்து மாணவ மாணவிகள் கருத்து தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் ( Tamil Nadu Directorate of Government Examinations - TNDGE) சார்பில் நடத்தப்படும் இந்த தேர்வு இன்று தொடங்கி வரும் மார்ச் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து தேர்வுகளும் காலை 10:15 முதல் மதியம் 1:15 வரை நடைபெறும். தேர்வு தொடங்கவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே மாணவர்கள் வினாத்தாள்களை படிக்கும் வகையில், வினாத்தாள் வழங்கப்படும். இதன் காரணமாக, தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாக மாணவர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள், அட்மிட் கார்டு மற்றும் பள்ளி அடையாள அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3,302 மையங்களில் நடத்தப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை, தமிழகம் முழுவதும் 7.25 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதனிடையே இன்று தொடங்கிய முதல...
Posts
Showing posts from March 2, 2024