சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலில் தயாரித்த டிஎன்பிஎஸ்சி அதிகாரி யார்? அதிர வைத்த ராமதாஸ் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிபதிகள் என அனைத்து நியமனங்களிலும் இடஒதுக்கீட்டு விதிகள் தொடர்ந்து சிதைக்கப்படுவதும் அதை ஆளும் அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதும் கவலையளிக்கிறது என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசின் நீதித்துறைக்கு 245 சிவில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் இடஒதுக்கீட்டு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தயாரித்த தற்காலிகத் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிபதிகள் என அனைத்து நியமனங்களிலும் இடஒதுக்கீட்டு விதிகள் தொடர்ந்து சிதைக்கப்படுவதும் அதை ஆளும் அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதும் கவலையளிக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 245 சிவில் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்...