58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்... வெளியான அரசாணை! தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கான வயது உச்ச வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வயது தளர்வு குறித்து சிறுபான்மையினர் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இந்த அரசாணை வெளியிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசாணையில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் உள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posts
Showing posts from February 24, 2024
- Get link
- X
- Other Apps
TNPSC Group 4: 6,244 பணியிடங்கள்: இன்னும் 4 நாட்கள்தான்- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் அரசுத் துறைகளில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க 4 நாட்கள் மட்டுமே உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம். தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான இடங்களும் இதிலேயே சேர்க்கப்பட்டுள்ளன. அதிக பணியிடங்கள், ஒரே தேர்வு என்பதால், இதற்கு எப்போதுமே தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம். 2022 தேர்வு இதற்கிடையே 2022ஆம் ஆண்டு பல்வேறு கட்ட தாமதங்களுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்று, தேர்வு முடிவுகள் வெளியாகின. ஜூன் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு தொடர்ந்து கடந்த மாதம் 2023ஆம் ஆண்டுக்கான அறிவிக்கை ...
- Get link
- X
- Other Apps
TNPSC இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா? குரூப் 7, 8 பற்றி தெரியுமா? TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு? How Many Groups in TNPSC? குரூப் – 1, குரூப் – 2, குரூப் – 3, குரூப் – 4, குரூப் – 5, குரூப் – 6, குரூப் – 7, குரூப் – 8 குரூப் – 1 சேவைகள்(Group-I) 1)துணை கலெக்டர் (Deputy Collector) 2)துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police) 3)மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை (District Registrar, Registration Department) ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) 4)கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector) 5)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer) 6)தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் பிரதேச அலுவலர் (Div. Officer i...