மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம்.. ஓபன் புக் பள்ளித் தேர்வு முறையை கையில் எடுக்கும் சிபிஎஸ்இ.!! 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி, பாடப்புத்தகத்தைப் பார்த்தே தேர்வுகளில் விடை எழுதும் ‘ஓபன் புக்’ நடைமுறையை கொண்டு வர சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஓபன் புக் பள்ளித் தேர்வு முறையை சோதனை முயற்சியாக வரும் கல்வியாண்டின் நவம்பர் மாதத்தில் அமல்படுத்த உள்ளது. புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வில், மாணவர்கள் தங்கள் குறிப்புகள், பாடப்புத்தகங்கள் அல்லது பிற ஆய்வுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் தேர்வின் போது அவற்றைப் பார்த்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவர். சோதனை முயற்சியாக 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பாடங்களை புத்தகத்தை பார்த்து புரிந்து எழுத அனுமதிக்கவும், 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை புத்தகத்தை பார்த்து புரிந...
Posts
Showing posts from February 22, 2024
- Get link
- X
- Other Apps
"ஆசிரியர்கள் வாழ்க்கையிலும், மாணவ மாணவியரின் கல்வியிலும் விளையாட வேண்டாம்" - அண்ணாமலை எழுத்தறிவிக்கும் ஆசிரியப் பெருமக்கள் வாழ்க்கையிலும், மாணவ மாணவியரின் கல்வியிலும் விளையாட வேண்டாம் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 1க்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன்பாகப் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களை விட அடிப்படை ஊதியம் ரூ.3,170 குறைவாக வழங்கப்படுவதை எதிர்த்து, சம வேலைக்கு சம ஊதியம் கோரி பல ஆண்டுகளாக தமிழகப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்றிருந்த திமுக, தனது 2021 தேர்தல் வாக்குறுதி எண் 311ல், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று போலி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 33 மாதங்கள் கடந்தும், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல், ஆசிரியப் பெருமக்களின் தொடர் கோரிக்கைகளையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்த கோரிக்கைகளை வ...
- Get link
- X
- Other Apps
நாளை முதல் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு | கல்வித்துறை முதன்மை செயலாளர் கடிதம்! பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை 23 ஆம் தேதி முதல் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கின்றனர். அரசுப்பள்ளி மட்டுமின்றி, உதவிபெறும், தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் மாணவர்கள் பெற்றோர் விவரங்கள், முகவரி, ஆதார், ரேஷன் உள்ளிட்ட விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலருக்கு ஆதார் எண் இல்லை. அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கி கணக்கு துவங்குதல் உள்ளிட்டவைகளுக்கு ஆதார் அவசியம் தேவைப்படுகிறது. இதனால் ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாளை (பிப்.,23) முதல் பள்ளிகளில் இதற்கான சிறப...
- Get link
- X
- Other Apps
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 500 பேர் கைது.!! சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் இடைநிலை பணி மூப்பு ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நான்காவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் டிபிஐ வளாகம் வாயிலில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி சுமார் 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர். இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள சமூக நலக்கூடங்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Get link
- X
- Other Apps
ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்: அன்புமணி சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , "தமிழகத்தில் இரு வகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை அழைத்துப் பேசுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது. 2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ...