
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் 1,768 இடைநிலை ஆசிரியர் வேலை! தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு தகுதியானவர் வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியா் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அறிவிப்பு எண்.01/2024 தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறை, ஆதிதிராவிடா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, சென்னை மாநகராட்சி, சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியா் (Secondary Grade Teacher) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதி: விண்ணப்பதாரா் பிளஸ் 2 வகுப்பு தோச்சியுடன், அரசு அங்கீகாரம் பெற்ற ஆசிரியா் பயிற்சி நிறுவனம், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்; ஆசிரியா் தகுதித் தேர்வு ('டெட்') முதல் தாளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் வயதுவரம்பு: 1.7.20...