
திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?அன்புமணி சந்தேகம். தமிழ்நாட்டில் திமுகவின் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?, இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டானிகுக்கு பா.ம.க.தலைவர் அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். dmk government provided 60567 employment in 3-years, Anbumani ramadoss seeking white paper report…தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858 பேருக்கு வேலை வழங்கப் பட்டிருப்பதாகவும், மொத்தமாக 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசும் போது முதலமைச்சர் தெரிவித்த இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்றாலும் கூட, உண்மையாகவே இவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், முதலமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் உள்ள முரண...