
ஜே.இ.இ மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு; தமிழக மாணவர் உட்பட 23 பேர் 100 சதவீதம் பெற்று அசத்தல்! தேசிய தேர்வு முகமை (NTA) இன்று ஜே.இ.இ மெயின் தேர்வின் முதல் அமர்வுக்கான மதிப்பெண் அட்டைகளை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் JEE முதன்மை தேர்வு இணையதளமான https://jeemain.nta.ac.in/ என்ற பக்கத்தில் தங்கள் மதிப்பெண்களைப் பார்க்கலாம். இம்முறை மொத்தம் 23 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், இதில் பெண்கள் யாரும் இல்லை. மாநில வாரியான டாப்பர்களில், குஜராத்தைச் சேர்ந்த த்விஜா தர்மேஷ்குமார் படேல் என்ற மாணவி மட்டும் 99.99 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பெற்றார். தெலங்கானாவில் அதிகபட்சமாக 7 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மூன்று பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர், டெல்லி மற்றும் ஹரியானாவில் 2 பேர், தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகாவிலிருந்து தலா ஒருவர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். தேசிய தேர்வு முகமை இந்த ஆண்டு, JEE Main 2024 இன் முதல் அமர்வை ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1 வரை நடத்தியது, இதில் JEE மு...