
ஒரே கையெழுத்தில் ஆசிரியர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தி உள்ளோம் - அமைச்சர் அன்பில்மகேஷ் ஆசிரியைகளுக்கு 12 மாதம் மகப்பேறு விடுப்பு அளித்து உத்தரவிட்ட இந்த அரசு, பெண்களுக்கு எதிராக அரசாணை கொண்டு வரவில்லை என்று அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையில் அரசாணை எண் 243 (மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர்கள் மாற்றம்) வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னையில் நேற்று நன்றி அறிவிப்பு மாநாடு நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று ஆசிரியர்கள் சார்பில் கலைஞர் நூற்றாண்டு குறித்து எழுதிய ‘கல்வியில் கலைஞர்’ என்ற நூலை வெளியிட்டு பேசியதாவது: 53 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒரே கையெழுத்தை போட்டு ஆசிரியர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய திமுக இயக்கத்தை சேர்ந்தவன் நான். அரங்கத்துக்கு வெளியில் இருப்பவர்களும் இதை கேட்க வேண்டும். இந்த அரசாணை பெண்களுக்கும் எந்த வகையில் பயன்தரும் என்பதை ஆராந்து பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் மீது எந்த பாதகமான நடவடிக்கை...