
TNPSC Group 4 Exam: 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை; குரூப் 4 தேர்வு பதவிகளுக்கான தகுதி என்ன? டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், என்னென்ன பதவிகள் உள்ளன? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி எ ன்பன உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு 28.02.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களின் எண்ணிக்கை: 108 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 19,500 - 71,900 இளநிலை உதவியாளர் (அமைச்சு பணி) காலியிடங்களின் எண்ணிக்கை: 2486 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 19,500 - 71,900 இளநிலை உதவியாளர் (பிற பணி கள்) காலியிடங்களின் எண்ணிக்கை: 118 (தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - 10, வக்பு வாரியம் - 27, குடிநீ...