Posts

Showing posts from February 5, 2024
Image
  எங்கும் அலைய வேண்டாம்.! குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைன் மூலம் நீங்களே விண்ணப்பிக்கலாம்.! எப்படி தெரியுமா.? குரூப்-4 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். வி.ஏ.ஒ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.28ம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வுக்கு tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஜூலை 1, 2024 அன்று குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். அதே சமயம், அதிகபட்ச வயது வரம்பு 32 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது…? ஆர்வம் உள்
Image
  பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் பேர் எழுதினர் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர்களுக்கான போட்டித் தேர்வு திட்டமிட்டபடி நேற்று நடந்தது. இந்த தேர்வில் 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 1351 பேர் தேர்வு எழுத வரவில்லை. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பதவிகளை நிரப்ப போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியிட்டு இருந்தது.  பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான காலிப் பணியிடங்கள் தற்போது 2,222 உள்ளன. கடந்த மாதம் 7ம் தேதி நடக்க இருந்த தேர்வு மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 4ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.  காலிப்பணியிடங்களில் பள்ளிக் கல்வியில் 2,171 இடங்களும், மிகவும் பிற்பட்டோர் நலத்துறையில் 23, ஆதிதிராவிடர் நலத்துறையில் 16, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் 12 இடங்கள் உள்ளன. மேற்கண்ட பணியிடங்கள் துறை வாரியாகவும், பாட வாரியாகவும், இட ஒதுக்கீடு வாரியாகவும் கூடிய வி
Image
  விழுப்புரத்தில் ஆசிரியர் தேர்வு 1454 பேர் பங்கேற்பு