
பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்.. உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்..! நாளை நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர் தேர்வில் மொழிவழி சிறுபான்மையின மாணவர்களுக்கு கட்டாய தமிழ் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ் கட்டாயத் தகுதித் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்பிறகு, ஜனவரி 7-ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்க் கட்டாயத் தகுதித் தேர்வு புயல்-மழை காரணமாக பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, தமிழ் மொழிக்கு கட்டாயத் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், முதன்மைத் தேர்வுக்கு அனுமதி வழங்கக் கோரியும், 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைச் சட்டத்தில் திருத்தம் செய்து அறிவிக்கக் கோரியும் மொழியியல் சிறுபான்மையினர் சென்னை உயர்நீதிமன்றத்தி...