இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு: பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீடு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழகத்தில் கரோனா காலக்கட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய பள்ளிக்கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக அப்போது ரூ.199 கோடியே 96 லட்சம் செலவிடப்பட்டது. அந்த திட்டத்தை திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் மாநில, மாவட்டம், தொகுதி அளவில் குழுக்கள் நியமிக்கப்பட்டன. தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2021 நவம்பரில் ரூ.50 கோடியும், 2022 மார்ச் மாதம் ரூ.114.17 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.173.31 கோடியும், 2023 மார்ச் மாதம் ரூ.52.85 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் 2024-25-ம் ஆண்டுக்கான இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கான மையங்கள் 1
Posts
Showing posts from February 1, 2024
- Get link
- X
- Other Apps
TNPSC Group 4 Exam: குரூப் 4- 6244 காலி இடங்கள்; தேர்வு முறை- சிலபஸ் எப்படி? டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், இந்த தேர்வுக்கான தேர்வு முறை என்ன? பாடத்திட்டம் என்ன? என்பன உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவியாளர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு 28.02.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களில் பெரும்பாலான பதவிகளுக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது தகுதி; 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சில