Posts

Showing posts from January 31, 2024
Image
  முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு  எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் மார்ச் மாதம் 18-ந்தேதி முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது.  இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பிப்ரவரி 19-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 18-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் தகவல்களுக்கு http://natboard.edu.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Image
 4-ம் தேதி 130 மையங்களில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: எக்ஸாம் ஹால் போகும் போது இதை எல்லாம் மறக்காதீங்க! தமிழகத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல வட்டார வள மைய ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வினை நடத்த அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். 2,222 ஆசிரியர் பணியிடங்களுக்கு 41,485 விண்ணப்பித்து இருந்தனர். ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான ஹால் டிக்கெட் இணையதளம் மூலம் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வர்கள் பதிவிறக்கம் செய்தனர். ஆனால் டிசம்பர் மாத இறுதியில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டதால் தேர்வர்கள் மேலும் படிப்பதற்கு அவகாசம் கிடைத்தது. அவர்களில் பலர் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு கடந்த சில மாதங்களாக சென்று ஆயத்தமாகி வருகின்றனர். தேர்வுக்கு இன்ன...
Image
  குரூப்4 தேர்வு காலிப்பணியிடங்களை அதிகரிக்க ஓபிஎஸ், டிடிவி கோரிக்கை குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் கோரியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்: குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிக்கையில் வெறும் 6,244 இடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்ற நிலையில், இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் சமூகநீதி, அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்றடைவது, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு லட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: ஜூன் மாதம் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வை எந்த புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடத்த டிஎன்பிஎஸ்சி கவனம் செலுத்த வேண்டும். தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை நினைவாக்கும் வகையில் குரூப் 4 தேர்வுக்காலிப்பணியிடங்களை அதிகரித்து புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும்.
Image
  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20000-ற்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம். அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். தற்போது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையததால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்விற்கு 6244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று (30.01.2024) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள. மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் ச...