
TNPSC - குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு - முழு விபரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் எவ்வளவு?, அறிவிப்புகள் எப்போது வரும்?, தேர்வு எப்போது நடக்கும்?, தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்ற தகவல்கள் அடங்கிய ஆண்டு திட்டங்களை அட்டவணையாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும். இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இதற்காக விண்ணப்பம் செய்வோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை நன்றாகப் படித்து கொள்ள வேண்டும். அவர்கள் தேர்வுக்கான அனைத்து தகுதிவாய்ந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறோம் என உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 28.02.2024, இரவு 11.59 ...