தமிழக அரசு பள்ளிகளில் 2800 ஆசிரியர் பணியிடங்கள்.. அரசு அதிரடி உத்தரவு..!!! தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த நிலையில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் ஒரே ஆசிரியர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கூடிய விரைவில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வருகின்ற மே 31ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள 2800 ஆசிரியர் காலி பணியிடங்கள் முதல் கட்டமாக நிரப்பப்பட உள்ளது.
Posts
Showing posts from January 28, 2024
- Get link
- X
- Other Apps
பட்டதாரி ஆசிரியர் நியமனம் எப்படி? எப்போது? பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் பின்பற்ற வேண்டிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் அரசாணையாக வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: 'பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வி இயக்ககத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் வரும் அரசு உ...
- Get link
- X
- Other Apps
இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் பள்ளிகளில் பணியாற்றக் கூடாது: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு விழுப்புரம்: கரோனா பரவலால் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ, மாணவிகளிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறை 'இல்லம் தேடிக் கல்வித் திட்டம்' என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தது. இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களில் பெரும்பாலானோர் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்பிப்பதால், அவர்களை சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து, பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான புகார்கள் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு சென்ற நிலையில், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலகம், அனைத்து அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது. அதில், 'இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் பகல் நேரத்தில் பள்ளிக்கு வரவழைத்து, வகுப்பறையில் பாடங்களை நடத்தச் சொல்வதோ, பள்ளி வேலைகளை செய்யச் சொல்வதோ கூடா...