
புதுச்சேரி அரசு பள்ளிகளில் 300 பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு விண்ணப்பம்... வரவேற்பு; பிப்., 22ம் தேதி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் அரசு பள்ளிகளில் காலியாக 300 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது . புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது.கடந்த சில நாட்களுக்கு முன் 67 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு பள்ளி கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. அடுத்து குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத பதவியான 300 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ள பள்ளி கல்வித் துறை விண்ணப்பம் வரவேற்றுள்ளது. ஆன்லைன் இன்று 23 ம்தேதி காலை 10 மணி முதல் அடுத்த மாதம் 22 ம்தேதி மாலை 5.45 மணி வரை https://recruitment.py.gov.in என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்த பிறகு அதனை டவுண்லோடு செய்து, இயக்குனர், பள்ளி கல்வித் துறை,பெருந்தலைவர் காமராஜர் வளாகம்,100 அடி ரோடு, அண்ணா நகர், புதுச்சேரி-6050...