Posts

Showing posts from January 19, 2024
Image
  டிப்ளமா, தட்டச்சு பாடத்திட்ட மாற்றம்! வரும் கல்வி ஆண்டு முதல் (2024-25), டிப்ளமா மற்றும் தட்டச்சு படிப்புக்கு, புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் (DoTE) முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகள், இன்ஜினியரிங் படிப்புகள் போன்றவற்றுக்கு, திறன்சார் கல்விக்கு ஏற்ப, பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. தன்னாட்சி கல்லுாரிகள் (Autonomous institutions), ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டங்களை புதுப்பித்துக் கொள்ள, பல்கலைகள் சார்பில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தன்னாட்சி அல்லாத கல்லுாரிகளுக்கு, சம்பந்தப்பட்ட பல்கலைகள் மற்றும் உயர்கல்வித்துறை சார்பில், பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, டிப்ளமா இன்ஜினியரிங் மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படிப்புகளை நடத்தும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், பாடத்திட்டங்களை புதுப்பித்து வருகின்றன. டிப்ளமா படிப்புக்கு, வரும் கல்வி ஆண்டில் இருந்து, தரம் உயர்த்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, தற்கால வளர்ச்சிக்கேற்ப, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தரவு தொழில்நுட்பம், இன்ஜ
Image
  சிறப்பாசிரியர் பணியமர்த்தல் ஆணைகளை உடனே வழங்குங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியர் பணிக்கு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டில், தேர்வு செய்யப்பட்டோருக்கு 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணியமர்த்தல் ஆணை வழங்கப்படவில்லை. தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து விட்டது. இதுதொடர்பான நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. அதனால், தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பாசிரியர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட எந்தத் தடையும் இல்லை. எனவே, தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். அவர்களுக்கான பணியமர்த்தல் ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
Image
  புதுச்சேரியில் ஜன.20ல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.!! புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 20ஆம் தேதி நவோதயா வித்யாலயா பள்ளியில் சேர்வதற்கான நுழைவு தேர்வு நடைபெற உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . அதனை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 3ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் செயல்படும் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.