
அரசு உத்தரவால் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு தமிழகத்தில் தொடக்க கல்வியில் ஆசிரியர் நியமனம் முன்னுரிமை பதவி உயர்வுக்கான தகுதி ஆகியன குறித்து வெளியான அரசு உத்தரவால் (அரசாணை எண்:243ல்) இடைநிலை ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேரின் பதவி உயர்வு கேள்விக்குறியாகி உள்ளது. இது ஆளும் கட்சி மீதான ஆசிரியர்களின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.ஒட்டுமொத்த ஆசிரியர்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேல் தொடக்ககல்வியில் உள்ளனர். ஆசிரியர்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்றால் தொடக்க கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றால் தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான அரசு உத்தரவு தொடக்க கல்வியை முடக்கும் வகையில் உள்ளது. அதாவது கல்வி ஒன்றியம் மாவட்டத்திற்குள் நடந்து பதவி உயர்வு இனிமேல் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நடக்கும் என்பதும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இருந்த பதவி உயர்வில் கை வைத்தும் அந்த உத்தரவு வெளியாகியதால் மாநில அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:தி.மு.க. அரசு மீண்டும் வந்தபோது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள...