.jpg)
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.க்கு ‘ஸ்லெட்' தகுதி தேர்வு நடத்த அனுமதி கல்லூரி உதவிப் பேராசிரியர் பதவிக்கான ‘ஸ்லெட்' தகுதித் தேர்வை நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தேர்வு முதல்முறையாக கணினிவழி தேர்வாக நடத்தப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர "நெட்" (தேசிய தகுதித் தேர்வு) அல்லது "ஸ்லெட்" (மாநில அளவிலான தகுதித் தேர்வு) ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியா முழுவதும் எந்த பல்கலைக்கழகத்திலும் அல்லது கல்லூரியிலும் உதவிப் பேராசிரியராகலாம். ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அந்த மாநிலத்தில் மட்டுமே பணிபுரிய முடியும். அந்த வகையில், தமிழகத்தில் நடத்தப்படும் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெறும்போது தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் ஆகலாம். ஸ்லெட் தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு 3 ஆண்டுகள் வழங்கப்படும். கடைசியாக 2015 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கொடைக்கானல் அன்னை த...