TANCET மற்றும் CEETA நுழைவு தேர்வு ஜனவரி 10 முதல் பிப்ரவரி 7 வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு 2024ம் ஆண்டுக்கான எம்.பி.ஏ., எம்.சி.ஏ ஆகிய முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு வரும் மார்ச் 9ம் தேதிநடைபெறும் என்றும், எம்.இ.,எம்டெக் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பிராத்தியோக நுழைவுத் தேர்வு (CEETA-PG) மார்ச்- 10ம் தேதி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வரும் ஜனவரி 10ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 7ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு: மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும்அறிவியல்/கலை கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி நிறுவனங்கள் ஒப்படைத்த எம்.பி.ஏ., எம்.சி.ஏ ஆகிய முதுநிலை படிப்புகளுக்கான பொது மாணவர் சேர்க்கையை (TAMIL NADU COMMON ENTRANCE TEST -TANCET ) அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. அதேபோன்று, மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உ...
Posts
Showing posts from January 7, 2024