Posts

Showing posts from January 2, 2024
Image
  ஆவின், மின்சார வாரிய காலிப்பணியிடங்கள்..!! இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு..!! வெளியான அறிவிப்பு..!! ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கான காலிப் பணியிடங்கள் முதன்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பதவியின் கல்வித்தகுதிக்கேற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-2-ஏ, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.  இந்நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த 20ஆம் தேதி வெளியிட்டது. அந்த அட்டவணையில், 18 வகையான பணிகளில் 3,772 காலியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேர்வு அட்டவணையில் ஆவின், மின்சார வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.  டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உதவியாளர் பதவி...