டிஎன்பிஎஸ்சி தேர்வு - ஆண்டு அட்டவணை வெளியீடு



அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும். 


குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். ஏப்ரல் 25ஆம் தேதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். 


குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog