அரசு துறைகளில் 4 லட்சம் காலிப்பணியிடம் பணிச்சுமையால் தவிப்பதாக குமுறல்
தமிழக அரசு துறைகளில் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பணிச்சுமையில் சிக்கி தவிப்பதாக சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் அதிகாரி முதல் அலுவலக உதவியாளர் வரை 12 லட்சம் பேர் பணிபுரிய வேண்டும்.
அதில் 4 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. பணியாற்றும் 8 லட்சம் பேருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறையில் 1 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அதில் 31,500 பேர் காலமுறை சம்பளம் பெறுகின்றனர்.
மற்றவர்கள் கடந்த 12 ஆண்டுக்கும் மேலாக மாதம் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொது செயலாளர் ஜெ.லட்சுமிநாராயணன் கூறியதாவது: 4 லட்சம் காலிப்பணியிடத்தால், பணிச்சுமையில் அரசு ஊழியர்கள் தவிக்கின்றனர். புதிய பென்ஷன் திட்டத்தை ஒழித்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
காலிபணியிடங்களை காலமுறை சம்பளத்துடன் நியமிக்க வேண்டும். சரண்டர் விடுப்பு, அகவிலைப்படி உள்ளிட்டவற்றை வழங்க வலியுறுத்தி, அக்., 5, 6 ல் கரூரில் மாநில மாநாடு நடத்த உள்ளோம். முன்னதாக அக்.,3 ல் தலைமை செயலாளரை சந்தித்து, கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம் என்றார்.
Comments
Post a Comment