TNPSC குரூப் 2, 2A தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதவில்லை. வெளியான அதிர்ச்சித் தகவல்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று (செப்.14) நடைபெற்ற குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஜூன் 20-ம் தேதி குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட 507 பணியிடங்களுக்கும், குரூப்-2ஏ-வில் உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட 2,327 காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது.
அனைத்து தேர்வு மையங்களும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தேர்வுக் கூடத்துக்குள் தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் தேர்வு மையங்களில் எந்தவொரு மின்னனு சாதனங்கள் (கால்குலேட்டர், மொபைல் போன்) ஆகியவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது.
இந்த தேர்வுக்கு, தமிழ்நாடு முழுவதும் இருந்து 7,93,966 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 5,81,000 பேர் மட்டுமே இன்று தேர்வெழுதினர். கிட்டதட்ட 2 லட்சம் பேர் தேர்வெழுத வரவில்லை. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுள் 73.22% தேர்வுகள் தேர்வினை எழுதியதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
Comments
Post a Comment