குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.




கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது. குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.


 மாநிலம் முழுவதும் 6,244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர்.


இந்தத் தேர்வில், தமிழ்ப் பகுதியில் இருந்து 100 கேள்விகளும், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருந்தன.


 இந்நிலையில், தேர்வுக்கான தற்காலிக விடைகள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதில் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க தேர்வாணையம் கூறியிருந்தது. இதையடுத்து இறுதி விடைப் பட்டியலை www.tnpsc.gov.in எனும் இணையதளத்தில் அரசுப் பணியாளர் தோ்வாணையம் நேற்று(செப்-16ம்தேதி) வெளியிட்டது.

Comments

Popular posts from this blog