அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தியே: தமிழ்நாடு அரசு விளக்கம்



அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தி என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.


ஓய்வு வயதை 62-ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை, அப்படி எந்த ஆலோசனையும் இல்லை என அரசு தெரிவித்துள்ளது.


மேலும் இதுகுறித்து அரசு தெரிவித்துள்ளதாவது; “அரசு ஊழியர் ஓய்வு வயது 60-லிருந்து 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது’ என்ற தகவல் பரப்பப்படுகிறது.


இது முற்றிலும் வதந்தியே. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog