அஞ்சல் துறையில் 44,228 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 44,228 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிராமப்பகுதிகளில் முறையான முழு நேர ஊழியர்களுக்கு அவசியம் இல்லாத நிலையில் அடிப்படை, சிக்கன அஞ்சல் சேவை வழங்குவதற்காக 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அஞ்சல் துறையில் துறை சாரா சேவை அமைப்பு உருவாக்கப்பட்டது. அதனடிப்படையில் 1,29,346 துறை சாரா கிளை அஞ்சல் அலுவலகங்கள் கிராம அஞ்சல் அலுவலர்கள் மற்றும் கிளை அஞ்சல் அலுவலர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
கிராம அஞ்சல் பணியாளர்களை பகுதி நேர பணியாளர்களாக பணியாற்ற செய்வதே இந்த அமைப்பின் நோக்கமாகும். இவர்கள் 65 வயது வரை பணி செய்ய முடியும்.
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் ஆங்கிலம், கணிதம் பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியறிவு பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என்பு கட்டாயம்.
இந்த பணி துறை சாரா அமைப்பின் கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுவதால் அஞ்சல் துறையின் முழு நேர பணியாளர்களுக்கான சம்பள விகிதம் முறை இவர்களுக்கு பொருந்தாது.
இந்த பணியிடங்களுக்கு குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், அதிகபட்சம் 40-க்குள்ளும் இருக்க வேண்டும் என்பது பொதுவான விதிகள்.
Gramin Dak Seveks(GDS) பணியானது மூன்று பணிகளாக தேர்வு செய்யப்படுகிறது.
மொத்த காலியிடங்கள் 44,228. இதில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்துக்கு 3,789 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பணி: Branch Post Masters(BPM)
சம்பளம்: மாதம் ரூ.12,000 - 29,300
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படும் நிலையில், அஞ்சல் அலுவலக பொறுப்பாளராக அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதாவது மக்களுக்கு அஞ்சல் துறை சேவைகளை வழங்குவது, ரெக்கார்ட்களை கையாள்வது, அஞ்சல் வங்கி தொடர்பான பணிகளை மேற்கொள்வது ஆகியன.
பணி: Assistant Branch Post Master (ABPM)
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 24,470
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் முத்திரைகள், எழுதுபொருட்கள் விற்பனை செய்வது, வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று அஞ்சல்களை பட்டுவாடா செய்வது, அஞ்சல்களை புக்கிங் செய்து அனுப்புதல், பண வரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்ற ஒதுக்கப்பட்ட பிற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பணி: Dak Sevak
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 24,470
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். அஞ்சல் துறை பணிகளில் அஞ்சல் அலுவலர் மற்றும் உதவி அஞ்சல் அலுவலர் ஆகியோருக்கு உதவி செய்தல் போன்ற ஒதுக்கப்பட்ட பிற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பிளஸ் 2 -இல் கணினி ஒரு பாடமாக படித்தவர்கள் தனியாக கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டியதில்லை.
வயதுவரம்பு: 5.8.2024 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த தகவல் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். தகவல் கிடைத்த 30 நாட்களுக்குள் கீழ்வரும் ஏற்பாடுகளை விண்ணப்பத்தாரர்கள் செய்திருக்க வேண்டும்.
இன்டர்நெட் வசதி, மின் இணைப்புடம் கூடிய கட்டடத்தை ஜிடிஎஸ்-அஞ்சல் அலுவலக இயக்குவதற்கு சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ தயார் செய்ய வேண்டும்.
கட்டடம் தரைதளத்தில் ஊரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்க வேண்டும்.
கட்டடம் மத்திய அல்லது மாநில அரசுக்கு சொந்தமான கட்டடமாக இருப்பது விரும்பத்தக்கது.
பணிநியமனம் செய்யப்படுபவர்கள் அதே கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமத்திலோ வசிப்பவராக இருக்க வேண்டும்.
மிதிவண்டி, இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.indianpostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.8.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment