தமிழக போஸ்ட் ஆபிஸில் 3,789 பணியிடங்கள்; தேர்வு இல்லை; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!



தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில் அருமையான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஜி.டி.எஸ் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், தகுதிகள், காலியிடங்களின் விவரம், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.


இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 3,789 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.


தபால் சேவை 


மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 44,228


தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை - 3,789


கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.


சம்பளம் : தபால் அலுவலர் (BPM) - ரூ.12,000 - 29,380

உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) - ரூ.10,000 - 24,470


தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.08.2024


விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவுக்கு ரூ. 100; SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Comments

Popular posts from this blog