'நீட்' ஏகப்பட்ட குளறுபடி.. மறு தேர்வு நடத்த வேண்டும்.. தேசிய தேர்வு முகமைக்கு 2,000 மாணவர்கள் கடிதம்


: நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.


நீட் மறுதேர்வு நடத்த வலியுறுத்தி சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார், கருணை மதிப்பெண் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு,


இதுவரை இல்லாத அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவைகளை சுட்டிக்காட்டி மறுதேர்வு நடத்த கோரிக்கை வைத்துள்ளனர். தங்களின் எதிர்காலம் தொடர்புடைய விவகாரம் என்பதால் மத்திய அரசும் தேசிய தேர்வு முகமை ஆகியவையும் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.


தேர்வு முடிவுக்கு முன்பே ஒஎம்.ஆர் ஷீட் மற்றும் வினாக்களுக்கான விடைகளையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட போது ஒஎம்.ஆர் ஷீட்டுடன் ஒப்பிடுகையில், மாறுபட்ட மதிப்பெண்கள் போடப்பட்டு இருப்பதாக பல மாணவர்கள் புகார்களை முன்வைத்துள்ளனர். அரஷிதா தெவ் என்ற 18 வயது மாணவி கூறுகையில், 384 மதிப்பெண்கள் நான் ஸ்கோர் செய்தேன் ஆனால், தேர்வு முடிவுகளில் 308 மதிப்பெண்களே வந்துள்ளது.


80 மதிப்பெண்கள் வித்தியாசம் உள்ளது" என்றார். எனவே பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தெரிவதால் மறு தேர்வு வைக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதேவேளையில், நீட் தேர்வில் எந்த குளறுபடியும் நேர்மையான முறையிலயே நடத்தப்பட்டது எனவும் தேசிய தேர்வு முகமை விளக்க அளித்துள்ளது.


முன்னதாக எம்பிபிஎஸ்., பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு உள்ளது. தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கும்படி தொடர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.


இந்த நிலையில் தான், 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் 13 மொழிகளில் கடந்த மாதம் மாதம் 5 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வை 10 லட்சத்து 29 ஆயிரத்து 154 ஆண்கள், 13 லட்சத்து 76 ஆயிரத்து 831 பெண்கள், 18 திருநங்கைகள் என மொத்தம் 24 லட்சத்து 6 ஆயிரத்து 79 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இது கடந்த ஆண்டைவிட 16.85 சதவீதம் பேர் அதிகமாக விண்ணப்பித்தனர்.


அவர்களில், 9 லட்சத்து 98 ஆயிரத்து 298 ஆண்கள், 13 லட்சத்து 34 ஆயிரத்து 982 பெண்கள், 17 திருநங்கைகள் என மொத்தம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் தேர்வை எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவு ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருந்தது. ஆனால் நேற்று இரவு திடீரென்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.


23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் எழுதிய தேர்வில், 5 லட்சத்து 47 ஆயிரத்து 36 ஆண்கள், 7 லட்சத்து 69 ஆயிரத்து 222 பெண்கள், 10 திருநங்கைகள் என 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 56.4 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது.


இதில் அதிகபட்சமாக ஆங்கில மொழியில் 18 லட்சத்து 92 ஆயிரத்து 355 பேர் எழுதி இருந்தனர். அதற்கடுத்தபடியாக இந்தி மொழியில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 908 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் தமிழில் எழுத 36 ஆயிரத்து 333 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். தமிழ் மொழியில் தேர்வு எழுதும் தேர்வர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.


'நீட்' தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் முதல் 100 இடங்களை பெற்றவர்களில் 67 பேர் ஒரே மாதிரியான மதிப்பெண்ணை எடுத்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதேபோல், 720 மதிப்பெண் முதல் 164 மதிப்பெண் வரை 11 லட்சத்து 65 ஆயிரத்து 904 பேர் எடுத்து இருக்கின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி இருக்கும் நிலை உள்ளது.

Comments

Popular posts from this blog