மாவட்ட கல்வி அலுவலர் ஆக நல்ல வாய்ப்பு... TNPSC குரூப் 1C தேர்வுக்கு அப்ளை பண்ணுங்க!



டிஎன்பிஎஸ்சி குரூப் 1C பதவிகளில் ஒன்று தான் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பணி.


இந்த பதவிக்கான தகுதிகள் என்ன, விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் உங்களுக்கு கொடுக்கிறோம்.



காலியிடங்கள்:


மாவட்ட கல்வி அலுவலர், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை

பொது போட்டி தேர்வர்கள் - 6

அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் வகை தேர்வர்கள் - 2

தகுதிகள்: - மாவட்ட கல்வி அலுவலர்

பொதுத் தேர்வர்கள்


கணிதவியல், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், புவியியல், வரலாறு, வணிகவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஏதேனும் ஒரு படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இடைநிலை அல்லது முன் பல்கலைக்கழக படிப்பு அல்லது மேல்நிலைப் படிப்பில் பகுதி ஒன்று அல்லது பகுதி 2 தமிழை கட்டாயமாக படித்திருக்க வேண்டும்.

மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கற்பித்தல் B.T அல்லது இளங்கலை கல்வியியல் B.Ed பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்புகள் படித்திருக்க வேண்டும்.


ஆசிரியர் நிலை தேர்வுகளுக்கு


இளங்கலை கற்பித்தல் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்ற பின்னர் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் மொத்தம் 12 ஆண்டுகளுக்கு குறையாமல் கற்பித்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.


வயதுவரம்பு

மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 1.7.2024 அன்று அதிகபட்ச வயதை பூர்த்தி செய்து இருக்கக் கூடாது

போட்டி தேர்வர்கள் - 32

ஆசிரியர் வகை தேர்வர்கள் - 42



தேர்வு முறை:

இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதில் 175 வினாக்கள் பொது அறிவு பகுதிகளில் இருந்தும், 25 வினாக்கள் கணிதப் பகுதியிலிருந்தும் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.


முதன்மைத் தேர்வு நான்கு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்த தேர்வில் 40 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.


அடுத்த மூன்று தாள்களும், பொது அறிவு மற்றும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் சார்ந்தவை. ஓவ்வொரு தாளும் தலா 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு தலா 3 மணி நேரம்.


முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவர். நேர்முகத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.


விண்ணப்பிக்கும் முறை

இந்த பணிகளுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in இல் உள்ள அறிவுரைகள் மற்றும் அறிக்கையை விரிவாக படித்து அதில் உள்ளபடி ஆவணங்களை தயாராக வைத்துக்கொள்ளவும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் ஒரு முறை பதிவு செய்வது முக்கியம். அதை ஏற்கனவே செய்தவர்கள் நேரடியாக அதன் தரவுகளை வைத்து இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


இந்த பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது மற்றும் இந்த தேர்வுகள் குறித்த விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அறிக்கை மூலம் தெரிந்து கொள்ளலாம். இங்கே கிளிக் செய்து அதை படித்துக் கொள்ளுங்கள்.


தேர்வு கட்டணம்:

ஒரு முறை பதிவிற்கு 150 கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக 100 ரூபாய் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


முக்கிய தேதிகள்

இணையவழி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 22. 5. 2024

விண்ணப்பங்களை திருத்த 27. 5. 2024 முதல் 29. 5. 2024

முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள் 12. 7. 2024 பிற்பகல் 2:30 முதல் 5 30 வரை

Comments

Popular posts from this blog