சென்னை உயர்நீதிமன்றத்தில் தட்டச்சர், கிளார்க் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!





சென்னை உயர்நீதிமன்றத்தின்கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள தட்டச்சர், கிளார்க் மற்றும் ஜூனியர், சீனியர் கிரேடு சுருக்கெழுத்தர் உள்ளிட்ட குரூப்-பி, சி பணிகளுக்கு புதுச்சேரியை சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அறிவிப்பு எண். 50/24


பணி: சீனியர் கிரேடு சுருக்கெழுத்தர் (Senior Grade Steno)


காலியிடங்கள்: 6


சம்பளம்: மாதம் ரூ.35,400


தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தட்டச்சில் முதுகலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்கம். ஆங்கில சுருக்கெழுத்தில் இளங்கலை, தமிழ் தட்டச்சில் இளங்கலை முடித்திருக்க வேண்டும். 


பணி: ஜூனியர் கிரேடு சுருக்கெழுத்தர் (Junior Grade Steno)


காலியிடங்கள்: 9


சம்பளம்: மாதம் ரூ.25,500


தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் இளங்கலை, தட்டச்சு பிரிவில் முதுகலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணி: மொழிபெயர்ப்பாளர்/பெயர்ப்பாளர்(Translator/Interpreter)


காலியிடங்கள்: 2


சம்பளம்: மாதம் ரூ.25,500


தகுதி: தெலுங்கு, மலையாளம் மொழிகளை முதன்மை பாடமாகக் கொண்டு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் , எழுத மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.


பணி: ஜூனியர் கிளார்க்(Junior Clerk)


காலியிடங்கள்: 23


சம்பளம்: மாதம் ரூ.19,900


தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பிரிவில் இளங்கலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணி: தட்டச்சர்(Typist)


காலியிடங்கள்: 13


சம்பளம்: மாதம் ரூ.19,900


பணி: Driver


காலியிடங்கள்: 1


சம்பளம்: மாதம் ரூ.19,900


தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: MTS (General)


காலியிடங்கள்:20


சம்பளம்: மாதம் ரூ.18,000


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. கட்டணத்தை The Registrar General, High court, Madras, Chennai என்ற பெயருக்கு டி.டி. ஆக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து REGISTRAR GENERAL, High Court, Madras, Chennai-600104 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 23.4.2024

Comments

Popular posts from this blog