மத்திய அரசில் வேலை: 960க்கும் அதிகமான இளநிலை பொறியாளர் காலியிடங்கள்
நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (Junior Engineer (Civil, Mechanical & Electrical) Examination) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff selection commission) வெளியிட்டது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த ஆட்சேர்க்கையின் மூலம் 960க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 18-04-2024 (நள்ளிரவு 11 மணி வரை)
காலியிடங்கள்: 960க்கும் அதிகமான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
S. No. Organization Post
1 Central Water Commission Junior Engineer (Civil)
2 Central Water Commission Junior Engineer (Mechanical)
3 CPWD Junior Engineer (Civil)
4 CPWD Junior Engineer (Mechanical)
6 MES Junior Engineer (Civil)
7 MES Junior Engineer (Electrical & Mechanical)
9 Farrakka Barrage (Project) Junior Engineer (Civil)
12 Director General Border Roads Organization Junior Engineer (Civil)
13 Director General Border Roads Organization Junior Engineer (Electrical)
14 Director General Border Roads Organization Junior Engineer (Mechanical)
15 Central Water Power Research Station Junior Engineer (Civil)
16 Central Water Power Research Station Junior Engineer (Mechanical)
17 Dte. of Quality Assurance (Naval) Junior Engineer (Naval Quantity Assurance -(Mechanical)
18 Dte. of Quality Assurance (Naval) Junior Engineer (Naval Quantity Assurance -(Electrical)
19 National Technical Research Organization Junior Engineer (Civil)
வயது வரம்பு: மத்திய பொதுப்பணித் துறைகளில் காலியாக உள்ள பதைவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01.08.2023 அன்று 32க்கு கீழ் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01-08-2024 அன்று 30க்கு கீழ் இருக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
கல்வித் தகுதி: எல்லை சாலைகள் அமைப்பு (BRO), மத்திய நீர்வள ஆணையம் (CwC), ராணுவ பொறியியல் சேவை(MES) ஆகிய துறைகளில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்புடைய பொறியியக் துறைகளில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதர பணிகளுக்கு தொடர்புடைய துறைகளில் டிப்ளமோ படிப்பு போதுமானதாகும்.
தெரிவு முறை: எழுத்துத் தேர்வில்( தாள் I மற்றும் தாள் II ) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். எல்லை சாலைகள் அமைப்பு பிரிவில் உள்ள பதவிகளுக்கு மட்டும் எழுத்துத் தேர்வுடன் உடற்தகுதி தேர்வு, உடல்திறன் போட்டிகள், ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு முறை நடைபெறுகிறது. ஒவ்வொரு பதவிக்கும் ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Download Notification: Notice of Junior Engineer (Civil, Mechanical and Electrical) Examination, 2024
விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் வலைதளமான ssc.nic.in வாயிலாக ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படும் மற்றும் கையெழுத்தை பதிவேற்றம் செய்யவேண்டும். புகைப்படங்கள், தொப்பி மற்றும் மூக்கு கண்ணாடி இல்லாமல் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment