4,000 பணியிடங்கள்.இன்னும் ஒருசில நாள் தான்.. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!




அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்.


தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதுதொடர்பான விவரங்களை படித்து பார்த்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


முக்கிய தேதிகள்:


உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் 28ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி இம்மாதம் 29 ஆகும். இந்த பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்வு தேதியில் மாற்றம் செய்தால் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.


கல்வி தகுதி:


விண்ணப்பதாரர்கள் யுஜிசி விதிமுறைகள் அல்லது பிஎச்டி படி NET/ SLET/ SET/ SLST/ CSIR/ JRF உடன் பிஜி (சம்பந்தப்பட்ட பாடம்) பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு TN Assistant Professor Recruitment 2024 இதனை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.


வயது மற்றும் விண்ணப்பக் கட்டணம்:


உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு அதிகபட்சமாக 57 ஆகும். SC/ SCA/ ST & PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300 ஆகவும், மற்றவர்களுக்கு ரூ.600 என விண்ணப்ப கட்டணம் நிர்ணயக்கப்பட்டுள்ளது.


 ஆன்லைனில் நெட் பேங்கிங்/ கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாம். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Comments

Popular posts from this blog