நீட் : பள்ளி செல்லாமல் பயிற்சி நிலையம் செல்லும் மாணவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் என்ன நடக்கிறது?
இந்தியாவில் டில்லி உள்பட பல்வேறு மாநிலங் களில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இரண்டு ஆண்டு களும் பள்ளிக்குச் செல்லாமல், பாடங்களைப் படிக் காமல், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராவதற்காகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வ தாக சி.பி.எஸ்.இ நடத்திய ஆய்வில் தெரிய வந் துள்ளது.
சி.பி.எஸ்.இ பள்ளிகளும் பயிற்சி மய்யங்களும் இதற்கென தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு, அம்மாணவர்கள் பொதுத்தேர்வில் மட்டும் கலந்து கொள்ளும் வண்ணம் போலியாக அவர்களுக்கு வருகைப்பதிவும் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நுழைவுத்தேர்வுகளுக்கு அதிகரித்து வரும் முக்கியத்துவத்தால் பள்ளிப் படிப்புக்கான தேவை குறைந்து வருவதாகவும் இதனால், மாணவர் களிடையே கற்றல் செயல்பாடு வெகுவாகப் பாதிக்கப் படும் என்றும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் (சி.பி.எஸ்.இ) இந்தியா முழுவதும் 24,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. டில்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் சுமார் 30க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளிகளில், கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சி.பி.எஸ்.இ ஆய்வு செய்தது.
அந்த ஆய்வில், 23 பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அந்த இரண்டு ஆண்டுகளும் பள்ளிக்குச் செல்லாமல், நீட், ஜே.இ.இ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் பயிற்சி மய்யங்களுக்கு அனுப்பப்படுவதாக, 'தி டெலிகிராஃப்' இணையதளத்தில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 பள்ளிகளுக்கு தாக்கீது
சி.பி.எஸ்.இ பள்ளிகளைப் பொறுத்தவரை, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு குறைந்தது 75 விழுக்காடு வருகைப்பதிவு இருத்தல் அவசியம். பயிற்சி வகுப்புக்குச் செல்லும் மாணவர் களுக்கு பள்ளிகளே போலியாக வருகைப்பதிவை உருவாக்குவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட் டிருக்கிறது.
இந்த ஆய்வுக்குச் சென்ற, டில்லியில் இயங்கிவரும் தனியார் பள்ளியொன்றின் முதல்வர், தான் ஆய்வுக்குச் சென்ற பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் ஒவ்வொன்றிலும் 60 மாணவர்கள் மட்டுமே இருந்ததாகவும் இந்த எண்ணிக்கை 11, 12ஆம் வகுப்புகளில் 500அய் தாண்டியதாகவும் தெரிவித்ததாக, 'தி டெலிகிராஃப்' இணையதளம் மேற்கோள் காட்டியுள்ளது.
ஆனால், 11, 12ஆம் வகுப்புகளுக்கு நேரடியாகச் சென்று பார்த்தபோது, 11ஆம் வகுப்பில் மாணவர்கள் ஒருவர்கூட வகுப்புக்கு வரவில்லை எனவும் 12ஆம் வகுப்பில் 50 பேர் மட்டுமே இருந்ததாகவும் அவர் அதில் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக, 23 பள்ளிகளுக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளதாக செய்தியில் தெரிவிக் கப்பட்டுள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட பள்ளிகளில் பல, சீரற்ற முறையில் (ரேண்டம்) தேர்ந்தெடுக்கப்பட்டதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் இதைப் பொருத்திப் பார்க்க முடியாது.
நுழைவுத்தேர்வு
மட்டும்தான் தகுதியா?
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு, அய்அய்டி/என்.அய்.டி போன்ற ஒன்றிய அரசின் நிதியுதவி பெறும், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட/நிதியளிக்கப்பட்ட முதன்மை கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான ஜே.இ.இ. எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு, சி.யூ.இ.டி எனப்படும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு உட்பட பல்வேறு நுழைவுத்தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாலும் பள்ளிப் படிப்பின் மீதான முக்கியத்துவம் குறைவதுமே இதற்குக் காரணம் என, கல்வியாளர்கள் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.
பத்தாம் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரை பள்ளி நிர்வாகமே சமாதானம் செய்து இவ்வாறு நேரடியாக பயிற்சி மய்யங்களுக்கு அனுப்புவதாகவும் அந்த மய்யங்களிலேயே அவர்களுக்கு 11, 12ஆம் பாடத்திட்டம் கற்றுக் கொடுக்கப்படும் என பள்ளிகள் கூறுவதாகவும் கல்வி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம், அப்பயிற்சி மய்யங்கள் அதிகளவு லாபம் ஈட்டுவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
கலை, அறிவியல் பிரிவுகள் முதல் மருத்துவம், பொறியியல் என அனைத்து உயர் கல்விக்கும் நுழைவுத்தேர்வில் மதிப்பெண்கள் பெற்றால் போதும், பள்ளிப்படிப்பு முக்கியமில்லை என்பதாலும் கல் லூரிக்குச் செல்வதற்கான அடிப்படைத் தகுதிதான் பிளஸ் 2 வகுப்பு என்ற மனநிலை பெற்றோர், மாண வர்கள் மத்தியில் இருப்பதாலேயே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி செயற்பாட்டாளர்கள் தெரி விக்கின்றனர்.
பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு இதுகுறித்துக் கூறுகையில், "இது திடீரென நடக்கவில்லை, நீட் அறிமுகமானதில் இருந்தே நடக்கிறது. பள்ளிப்படிப்பு மதிப்பெண்ணை வைத்து இனி உயர் கல்வியில் சேர முடியாது. நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள்தான் தகுதி எனச் சொல்லிவிட்டார்கள். அப்படியிருக்க மக்கள் எதில் கவனம் செலுத்துவார்கள்?" எனக் கேட்கிறார்.
இதனால் மாணவர்களின் கற்றல் செயல்பாடு பெருமளவு குறையும் எனக் கூறும் பிரின்ஸ், தன்னம் பிக்கை, மனித உரிமை, பெண்ணுரிமை, சூழலியல் உரிமை, அரசமைப்பு சட்டம் உள்ளிட்டவை குறித்து மாணவர்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு குறையும் எனத் தெரிவித்தார்.
பயிற்சி மய்யங்களின் பெருக்கம்
எண்ணறிவு, எழுத்தறிவு, வேலைவாய்ப்பு ஆகிய வற்றைப் பெறுவதற்கான நோக்கம்தான் இத்தகைய பயிற்சி மய்யங்களில் இருப்பதாக அவர் கூறுகிறார்.
"இவற்றைக் கற்க பள்ளி தேவையில்லை. ஆனால், மாணவர்கள் மனித மாண்புகளைக் கற்றுக்கொள்ள பள்ளிப் படிப்பும் அதுதரும் சூழலும் மிகவும் முக்கியம்" எனத் தெரிவிக்கிறார் பிரின்ஸ்.
அடிப்படை அறிவியல் மூலம் உருவாகியிருக்கும் சர்.சி.வி.ராமன் போன்ற விஞ்ஞானிகளையும் சமூக விஞ்ஞானிகளையும் இத்தகைய பயிற்சி வகுப்புகளால் உருவாக்க முடியாது என்கிறார் அவர்.
பீகாரில் மாணவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு மட்டுமே செல்லும் போக்கைத் தவிர்க்க இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை மாலை நேரத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்ற விதிமுறையை முந்தைய அய்க்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி அரசு கொண்டு வந்தது.
"பெயரளவுக்கு மட்டும் மாணவர்களை பள்ளியில் சேர்த்துவிட்டு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவது இந்தியா முழுவதும் நடக்கிறது. ஆனால், பள்ளிப் படிப்புதான் அடிப்படை – மாறாக, பயிற்சி வகுப்புகள் கூடுதல் வகுப்புகளாக மட்டுமே இருக்க வேண்டும்," என்கிறார் மற்றொரு கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
இத்தகைய போக்கால் காளான்கள் போன்று பயிற்சி மய்யங்கள் முளைக்கும் என்கிறார் அவர்.
‘செய்முறை வகுப்புகள் அவசியம்’
மேலும், தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆசையால், எவ்வளவு பெற்றோர் ‘பைஜுஸ்’ போன்ற செயலிகளால் தங்கள் பணத்தை இழந்தனர் என ஜெயப்பிரகாஷ் காந்தி கேள்வி கேட்கிறார். கவர்ச்சிகரமான விளம்பரங்களால் பெற்றோர்கள் ஈர்க்கப்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.
அதனால், "உயர்கல்விகளுக்கும் பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்," என்கிறார் காந்தி.
தியரி (Theory) படிப்புகளில் தோல்வியடையும் மாணவர்கள் செய்முறை வகுப்புகளில் முழு மதிப்பெண்கள் எடுப்பதைச் சுட்டிக்காட்டும் அவர், செய்முறை வகுப்புகள் பெயரளவுக்குத்தான் பள்ளி களில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன எனத் தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத, சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரின் பெற்றோர், தமிழ்நாட்டில் அத்தகைய நிலை இல்லை எனத் தெரிவித்தனர். பள்ளி வகுப்பு முடிந்து, மாலையில்தான் பயிற்சி வகுப்புகளோ, டியூஷன்களோ நடத்தப்படுவதாகத் தெரிவித்தனர்.
Comments
Post a Comment