அரசுப் பள்ளிகளில் இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சேர்க்கை
அரசுப் பள்ளிகளில் மாா்ச் 1-ஆம் தேதி வரை இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவா் சேர்க்கைப் பணிகள் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்டது.
கடந்த 1-ஆம் தேதி முதல் மாணவா் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 5 நாள்களில் மட்டும் அரசு பள்ளிகளில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை பெற்றுள்ளனா். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8,365 மாணவா் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதவிர அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவா்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவும், 5 லட்சம் மாணவா் சேர்க்கையை இலக்காக கொண்டு செயல்படவும் ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment