ஜூன் 3-ல் ஸ்லெட் தகுதித் தேர்வு அறிவிப்பு
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உதவும் 'ஸ்லெட்' தகுதித் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடத்தப்படும் என நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.msuniv.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவிலான நெட் தேர்வை யுஜிசியாலும், மாநில அளவிலான ஸ்லெட் தேர்வு குறிப்பிட்ட ஒரு பல்கலைக்கழகத்தாலும் நடத்தப்படும்.
அந்த வகையில் 2024 முதல் 3 ஆண்டுகளுக்கு ஸ்லெட் தேர்வு நடத்தப்படும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்லெட் தேர்வுக்கான தொடக்கநிலை அறிவிப்பை சுந்தரனார் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஸ்லெட் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடத்தப்பட உள்ளது. மொத்தம் 43 பாடங்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி முடிவடைய உள்ளது.
தேர்வுக்கான கல்வித் தகுதி, பாடங்கள், தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் கூடிய முழு அறிவிப்பு மார்ச் 20-ம் தேதி பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.msuniv.ac.in) வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.சாக்ரடீஸ் அறிவித்துள்ளார்.
ஸ்லெட் தேர்வை முதுகலைப் பட்டதாரிகள் எழுதலாம். தற்போது முதுகலைப் படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்போரும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு www.msuniv.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
Comments
Post a Comment