2,553 அரசு மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் 2,553 பொது மருத்துவா் பணியிடங்களுக்கு ஏப்.24 முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தேர்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்புநா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவா்களை மருத்துவப் பணியாளா் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது.
இந்நிலையில், 2,553 பொது மருத்துவா் (அசிஸ்டென்ட் சா்ஜன்-ஜெனரல்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆா்பி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: பொது மருத்துவா் பணியிடங்கள் அனைத்தும் ரூ.56,100 - ரூ.1,77,500 என்ற மாத ஊதிய விகிதத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு எம்ஆா்பி இணையதளத்தில் ஏப்.
24 முதல் மே 15 வரை விண்ணப்பிக்கலாம். கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500, மற்றவா்களுக்கு ரூ.1,000 என விண்ணப்பக் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பு, ஊதியம், விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு தான் 1,021 உதவி மருத்துவா்கள் தேர்வு செய்யப்பட்டனா். இதற்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் விண்ணப்பித்திருந்தனா்.
Comments
Post a Comment