மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம்.. ஓபன் புக் பள்ளித் தேர்வு முறையை கையில் எடுக்கும் சிபிஎஸ்இ.!!




9 முதல் 12ம் வகுப்புகளுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.



புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி, பாடப்புத்தகத்தைப் பார்த்தே தேர்வுகளில் விடை எழுதும் ‘ஓபன் புக்’ நடைமுறையை கொண்டு வர சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஓபன் புக் பள்ளித் தேர்வு முறையை சோதனை முயற்சியாக வரும் கல்வியாண்டின் நவம்பர் மாதத்தில் அமல்படுத்த உள்ளது. புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வில், மாணவர்கள் தங்கள் குறிப்புகள், பாடப்புத்தகங்கள் அல்லது பிற ஆய்வுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் தேர்வின் போது அவற்றைப் பார்த்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவர்.


சோதனை முயற்சியாக 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பாடங்களை புத்தகத்தை பார்த்து புரிந்து எழுத அனுமதிக்கவும், 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை புத்தகத்தை பார்த்து புரிந்து எழுத அனுமதிக்கவும் சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.முன்னதாக கொரோனா தொற்றுக்கு நடுவில் கடந்த ஆகஸ்ட் 2020 ல் கடும் எதிர்ப்பையும் மீறி, புத்தகத்தை பார்த்து எழுதும்படி, டெல்லி பல்கலைக்கழகம் முயற்சி செய்தது. இந்த தேர்வினை வெற்றிகரமாக டெல்லி பல்கலைக்கழகம் நடத்திய நிலையில் அதே முயற்சியினை சிபிஎஸ்இ மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog