மார்ச் மாதத்திலே கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த நடவடிக்கை - அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை மாநில தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கி உள்ளார். அதன்படி தேர்வு நடைபெறும் தேதியில் தேர்தல் நடைபெறாது எனவும் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.
அதில் "மக்களவை தேர்தலுக்கு முன்னதாக கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட்டு வருகிறோம். அதன்படி மார்ச் மாதத்திலே செமஸ்டர் தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment