சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 500 பேர் கைது.!!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் இடைநிலை பணி மூப்பு ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நான்காவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் டிபிஐ வளாகம் வாயிலில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி சுமார் 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்.
இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள சமூக நலக்கூடங்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment